நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி..!
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலையம் சார்பாக, வருகின்ற ஜனவரி 30-ம் தேதி அன்று நாட்டுக் கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 30.01.2020 (வியாழன்)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5மணி
இடம் :உழவர் பயிற்சி நிலையம்,
ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம். தொடர்புக்கு : 044-27264019, 7530052315.
பயிற்சியின் சிறப்பம்சங்கள் : இப்பயிற்சி வகுப்பில் நாட்டுக்கோழி இனங்கள், தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, சிறிய குஞ்சு பொரிப்பானில் முட்டைகளை பொரிக்க வைத்தல், பொருளாதார கணக்கீடு, முறையான பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இப்பயிற்சி வகுப்பில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
ஆடு வளர்ப்பு பயிற்சி..!
கரூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆடு வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 03.01.2020 – 10.02.2020 (விடுமுறை நாட்கள் நீங்கலாக – 6 நாட்கள்)
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
இடம் : கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,பாண்டுதாகரன்புதூர், மண்மங்களம்,
கரூர் மாவட்டம் – 639006.
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இந்த பயிற்சியில் இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்கு ஏற்ற ஆட்டினங்கள், தரமான ஆடுகளை தேர்வு செய்தல், ஆடுகளுக்கு கொட்டகை அமைத்தல், தீவன பயிர் உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை, ஆடுகளை தாக்கும் தொற்று நோய்கள், குட்டிகள் பராமரித்தல், இளம் குட்டிகள் இறப்பை தடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.