ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் உதவி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும். நில உடைமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
sir viruthunagar disticku irukka sir.
பதில்
இந்த வாய்ப்பு தூத்துக்குடியில் மட்டுமா?
பதில்
Dharmapuri ku
At present that r giving subsidy
sir
Perambalur disticku irukka sir
no
தஞ்சாவூர் மாவட்டம்…, ஒரத்தநாடு தாழுக்காவுக்கு இந்த திட்டம் பொருந்துமா
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம்
panapakkam
இந்த வாய்ப்பு தூத்துக்குடியில் மட்டுமா
மை டிஸ்ட்ரிக்ட் ராணிப்பேட்டையில் இருக்கா