தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள குறு வட்டங்களாக பசுவந்தனை, வேடநத்தம், எப்போதும்வென்றான் மற்றும் மணியாச்சி ஆகிய குறுவட்டங்களில் குழாய் கிணறு அல்லது துளை கிணறு அமைப்பதற்கு செலவிடும் தொகையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.25,000, மேலும் அனைத்து குறுவட்டாரங்களிலும் டீசல் பம்பு செட் அல்லது மின் மோட்டார் பம்பு செட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.15,000, நீர் பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத தொகை அல்லது எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மற்றும் தரை நிலை நீர் தேக்க தொட்டி நிறுவுவதற்கு ஏற்படும் செலவில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.40,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டுமா