பயிர் வளர்ச்சியில் நீரின் பங்கு

மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது அவை பயிர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவ்வாறு மண்ணில் ஈரப்பதம் குறையும்போது (பயிர்களுக்காக) தண்ணீரை மண்ணிற்கு அளிப்பதே ‘நீர் பாய்ச்சுதல்’ எனப்படும்.

நீலகிரியில் குறைந்த பட்சமாக 0.1% தஞ்சாவூரில் அதிகபட்சமாக 88% நீர் பாய்ச்சப்படுகிறது. ஏற்காடு மற்றும் காஞ்சிபுரத்தில் 50 – 78 விழுக்காடும், தர்மபுரி 19 விழுக்காடும், சேலம் 23 விழுக்காடு மற்றும் திண்டுக்கல்லில் 29 சதவீதமும் நீர்பாய்ச்சப்படுகிறது.

இந்தியாவில் நீர் பாய்ச்சுதல் மேம்பாடு
பழங்காலத்திலிருந்தே இந்தியா சீனா போன்ற நாடுகளில் நீர்ப்பாய்ச்சல் செய்யப்படுகிறது. நீர்பாய்ச்சல் ஆரம்பித்த பின்தான் குடியிருப்புகள் தோன்றின. தெற்கு மற்றும் தென்வடக்கு ஆசியாவில் தான் இக்குடியிருப்புக்கள் முதன் முதலில் தோன்றின. தமிழ்நாட்டில் சோழர்கள் நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினர். கரிகாற் சோழனால் கட்டப்பட்ட கல்லணை இதற்கு சிறந்த உதாரணம்.

  • தண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள்
  • தண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள் அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.
  • தண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.
  • ஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது.
  • தாவரத்தின் மொத்த இடையில் தண்ணீர் 70 சதவிகிதம் வகிக்கிறது.
  • விதைமுளைப்பதற்கும் வேர் வளர்ச்சிக்கும மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தண்ணீர் ஒரு இன்றியமையாத கூறாகும்.
  • எனவே தண்ணீர் பயிர் வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்!100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்!

100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கு மானியம்!! சொட்டு நீர், தௌpப்பு நீர் பாசனம் மற்றும் புதிய கிணறுகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்ப்பாசன திட்ட அமைப்புகளை நிறுவ விரும்பும் விவசாயிகள் மானியம்

READ MOREREAD MORE

வேளாண் பொருட்கள் வாங்க விற்கவேளாண் பொருட்கள் வாங்க விற்க

வேளாண் பொருட்கள் வாங்க விற்க 1.கரும்பு தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவா தம்மிடம் 800 கட்டு கரும்பு இருப்பு உள்ளதாகவும் ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு : 87783 58446 2.மொச்சை அவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த

READ MOREREAD MORE

நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்நீர் பாசன குழாய், கிணறு, பம்புசெட் மற்றும் நீர் தேக்க தொட்டி அமைத்திட மானியம்

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் உப திட்டமான துணை நிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் நிலத்தடி

READ MOREREAD MORE