மதுரை மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!!

மதுரை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கி 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

இது குறித்து கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி : கோமாரி வைரஸ் கிருமி தாக்குதலால் கால்நடைகளுக்கு கோமாரி நோய் எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோய் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல், வாயில் உமிழ் நீா்வடிதல், சினை பிடிப்பதில் சிரமம் ஆகியன ஏற்படும். இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க தடுப்பூசி போடுவது அவசியம்.

மதுரை மாவட்டத்தில் 17ஆவது சுற்று தடுப்பூசி முகாம் அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இதில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 850 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணிகள் நடைபெறும் நாள்களிலும் கால்நடை மருந்தகங்கள் தொடா்ந்து செயல்படும். கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 thoughts on “மதுரை மாவட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

வேளாண் பொருட்கள் வாங்க விற்கவேளாண் பொருட்கள் வாங்க விற்க

வேளாண் பொருட்கள் வாங்க விற்க 1.கரும்பு தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவா தம்மிடம் 800 கட்டு கரும்பு இருப்பு உள்ளதாகவும் ஒரு கட்டு 300 ரூபாய்க்கு விற்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு : 87783 58446 2.மொச்சை அவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த

READ MOREREAD MORE

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!மத்திய அரசின் உழவர் உதவித்தொகை பெற அழைப்பு!

மத்திய அரசின் உழவர் உதவித்தொகை திட்டத்தில்  சேர்ந்து விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியான

READ MOREREAD MORE

விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறைவிதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை

விதைகளை தேர்வு செய்வதற்கு அந்த விதைகளை பரிசோதனை செய்வது அவசியம் – வேளாண் துறை இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் சு.சித்திரைச் செல்வி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளில் ஒரு பிரிவினர், ஒவ்வோர் முறை விதைப்பு

READ MOREREAD MORE