மத்திய அரசின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார் திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநர் சாமிநாதன்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் உழவர் உதவித்தொகை திட்டத்தில் தகுதியான சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணையாக தலா ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தில், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இதுவரை 7,100 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். திட்டத்தின் பயன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது, பெரிய விவசாயிகளும் இதில், சேர்ந்து பயன் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஓய்வுதியம் பெறுபவர்கள், வருமானவரி செலுத்துபவர்கள் இத்திட்டத்தில் சேர அனுமதி இல்லை. இதேபோல், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும். எனவே, திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கணிணி சிட்டா ஆகியவற்றுடன் பொது சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இதுவரை இத்திட்டத்தில் சேர்ந்து ஒரு தவணை அல்லது 2 தவணைகள் பணம் பெற்றவர்கள் தங்களுக்கு மூன்றாவது தவணை நிதி வரவில்லை எனில் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் பொது சேவை மையத்தில் சரி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
how to apply this one
epdi apply panrathu