விவசாய தகவல்கள் 14-09-2019
வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம். விவசாயத்திற்கு தேவையான உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுரங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
உளுந்து, தட்டைப்பயிறு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. மக்காச்சோள விவசாயிகளுக்கு பூச்சிகளை அழிக்கும் இனக்கவர்ச்சி பொறி மற்றும் விதை நேர்த்திக்கான மருந்துகள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் என்றார்.
கால்நடைகள், விவசாய வேளாண் பொருட்களை வாங்க விற்க விவசாய சந்தை செயலி – டவுன்லோட் செய்ய