முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மையா?

முருங்கைக்கீரையின் பயன்கள்.:

முருங்கையின் எல்லா பாகங்களும் சிறந்த உணவாகவும் மருந்தாகவும் நமக்கு பயன் தருகிறது. முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு இதனுடன் சீரகம் பொடித்துப்போட்டு தினமும் மதிய உணவு வேலையிலே சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட பலவிதமான நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.

ரத்தசோகை உள்ளவர்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளொபின் அளவு அதிகரித்து உடலை சீராக வைத்துக் கொள்ளும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலி குணமடையும்.

மற்ற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது. ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் ‘சி’ உள்ளது. பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது. கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் ‘ஏ’ உள்ளது. வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் உள்ளது. தயிர் பாலாடைக் கட்டியில் உள்ளது போல 2 மடங்கு புரதச்சத்து உள்ளது.

முருங்கை ஈர்க்கை எடுத்துக் கொண்டு இதனுடன் மிளகு, சீரகம் சோம்பு சேர்த்து கொதிக்க சூப் செய்து குடிக்க காய்ச்சல், கைகால்வலி, மூட்டுவலி, வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.

முருங்கைப்பூ ஒரு கைப்பிடியளவு எடுத்துக்கொண்டு 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி காலையில் உணவிற்கு முன் சாப்பிட்டு வர ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.

முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்திவந்தால் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகும். இதை இயற்கையான வயகரா எனக் கூறலாம்.

முருங்கை பட்டையை சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். முருங்கைவேர் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்கவைத்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உடல் வலி, கைகால் வலி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

மானிய விலையில் விதை பயறுகள்!!மானிய விலையில் விதை பயறுகள்!!

விவசாய தகவல்கள்  14-09-2019 வேடசந்துார் வட்டார விவசாயிகளுக்கு பயறு வகைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக, உதவி இயக்குனர் தேன்மொழி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி நிலத்தை உழும் பணியில் ஈடுபடலாம்.

READ MOREREAD MORE

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!!

நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!! பெரம்பலுர் மாவட்டம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு விதமான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில்

READ MOREREAD MORE

விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?விளம்பரம் போஸ்ட் செய்ய முடியவில்லையா?

விவசாய சந்தை அப்ளிகேஷன் பயனாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டது. சில உள்கட்டமைப்பு பிரச்சனையால், சிலரால் விளம்பரங்களை போஸ்ட் செய்ய இயலாமல் இருந்தது, தற்போது பிரச்சனை சரி செய்துகொண்டு வருகிறோம், உங்களால் போஸ்ட் செய்ய முடியவில்லை என்றால். உங்களது இமெயில் ஐடி;யை கமெண்ட்

READ MOREREAD MORE