100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கு மானியம்!!
சொட்டு நீர், தௌpப்பு நீர் பாசனம் மற்றும் புதிய கிணறுகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, நீர்ப்பாசன திட்ட அமைப்புகளை நிறுவ விரும்பும் விவசாயிகள் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவான் அமைப்புகளுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்புகளை நிறுவ விரும்பும் விவசாயிகளுக்கு கூடுதல் நிதி உதவி அளித்திட கூடுதல் நீர் மேலாண்மை திட்டம் என்ற சிறப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தில் 4 வகையான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பதிவு நடைபெற்று வருகிறது.
இதன்படி, விவசாயிகள் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், மின்மோட்டர் அல்லது டீசல் மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், வயலுக்கு நீர் கொண்டு செல்லும் பைப் வாங்க ரூ.10 ஆயிரம், தரைமட்ட தொட்டி அமைத்து நீர் சேமிக்க ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறு மானியத்தை பயன்படுத்த அரசால் அனுமதிக்கப்பட்ட வருவாய் பிர்கா விவசாயிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
இதர திட்டங்களுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை திட்டத்தில் பங்கு பெற 1.10.2018 தேதிக்கு பின்னர் பாசன அமைப்பு அமைத்திட விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு இருப்பது அவசியம். விவசாயிகள் புதிதாகவும் பதிவு செய்யலாம்.
மானியம் பெற்றிட விவசாயிகள் தனது சொந்த செலவில் இந்த வசதிகளை உருவாக்கிக் கொண்டு, பின்னர் கள ஆய்வுக்கு பின் மானிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டங்கள் குறித்து மேலும் விவரங்கள் பெற வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.
Eppadi maniyam vaguvathu
பாலகணபதி